தித்திக்கும் தேனில் ஜில்லுனு ஐஸ்க்ரீம் செய்வது எப்படி ?
- தேன் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
ஐஸ்கிரீம் என்றால் சிறியவர்கள் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. சிலர் ஐஸ்கிரீமிற்கு அடிமையாக கூட உள்ளனர். தற்போது தித்திக்கும் தனில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- முட்டை வெள்ளைக்கரு – 10
- பால் – 1 லிட்டர்
- கிரீம் – 500 மில்லி
- தேன் – 2 கப்
- வெண்ணிலா எசன்ஸ் – 2 ஸ்பூன்
செய்முறை
தேன் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையையும்,தேனையும் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
அதன் பிறகு கேஸ் ஸ்டவ்வை சிம்மில் வைத்து, கொதிக்க வைத்து பாலுடன் முட்டை, தேன் கலந்துள்ள கலவையை சேர்த்து கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். பிறகு கெட்டியான கலவையை எடுத்து வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் கிரீம், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை கலந்து, இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில், உறைய வைத்த எடுத்தால் ருசியான தேன் ஐஸ்கிரீம் தயார்.