தாய்லாந்து அரசுடன் இணைந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை பத்திரமாக மீட்க அமெரிக்கா நடவடிக்கை!அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
தாய்லாந்து அரசுடன் இணைந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை பத்திரமாக மீட்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்கு கால்பந்தாட்ட அணி சிறுவர்கள் தங்கள் பயிற்சியாளருடன் சாகச பயணம் மேற்கொண்டனர்.பின்னர் அங்கு கனமழை காரணமாக குகைக்குள் வெள்ளம் சூழ்ந்தது.
பின்னர் விவரம் அறிந்த மீட்புப் படையினர் குகைக்கு சென்று சிறுவர்களை மீட்க்கும் பணியில் இறங்கினர்.கடந்த 2 ஆம் தேதி சிறுவர்களை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக களமிறங்கினர்.
தொடர்ந்து 13 நாட்களுக்கு மேலாக குகைக்குள் சிக்கித்தவித்து வருகின்றனர்.இந்நிலையில் குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது. சிறுவர்களை மீட்க 18 பேர் கொண்ட மீட்புப்படை குழுவினர் கயிறுக்கட்டி குகையினுள் சென்றனர்.தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் .
மேலும் மற்ற சிறுவர்களையும்,பயிற்சியாளர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தாய்லாந்தில் கடற்படை வீரர்கள்,வெளிநாட்டு நீச்சல் வீரர்கள் மீட்பு பணியிலும் முதலுதவியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
The U.S. is working very closely with the Government of Thailand to help get all of the children out of the cave and to safety. Very brave and talented people!
— Donald J. Trump (@realDonaldTrump) July 8, 2018
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த மீட்பு பணிகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தாய்லாந்து அரசுடன் இணைந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை பத்திரமாக மீட்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
தாய்லாந்தில் மீட்புப் பணியில் ஐரோப்பியா,அமெரிக்கா,தாய்லாந்து வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.