தாம்பத்திய உணர்வை தூண்டும் உணவு வகைகள்..!!
தாம்பத்திய உணர்வை தூண்டக் கூடிய 12 உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். அதே போல் தாம்பத்தியத்தில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். சிலருக்கு தாம்பத்தியல் ஈடுபாடு இல்லாமல் இருக்கும். இளமை பருவத்தில் தாம்பத்திய உணர்வு மற்றும் உடலுறவில் ஈடுபாடு குறைவாக இருந்தால், வாழ்க்கையில் உள்ள ஈடுபாடும் குறையும், வருங்கால சந்ததிகளும் உருவாகாது.
1 சாக்லேட்
கோகோவில் பெனிலிதிலமைன் உள்ளது. இது உடலுக்குள் வேதியல் மாற்றங்களை உண்டாக்கி உடலுறவில் உள்ள ஈடுபாட்டை அதிகரிக்கிறது.
2 மிளகாய்
மிளகாயில் உள்ள கேப்சய்சின் சுழற்சியை அதிகரித்து நாடி நரம்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
3 மத்தி மீன்
மத்தியில் அதிகளவு ஜிங்க் உள்ளது. இது டெஸ்டோரோன்களை அதிகரிக்க செய்து உடலுறவு உணர்ச்சியை தூண்டுகிறது
4 காபி
காபியில் உள்ள காஃபின் உங்களது இருதய ஒட்டத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
5 அவோகேடா
இதில் உள்ள வைட்டமின் ஈ ஆனது உடலில் உள்ள டெஸ்டிரோன், ஆஸ்ரோஜென், ப்ரோகேஷ்ட்ரோன் ஆகியவற்றை தூண்டி உடலுறவுக்கான தூண்டுதல்களை அதிகரிக்கிறது.
6 வாழைப்பழம்
வாழைப்பழம் உடலுக்கு பொட்டாசியத்தை கொடுக்கிறது. இது உறுப்புகளின் தூண்டுதல்களுக்கு பயன்படுகிறது.
7 தேன்
தேன் உடலுறவுக்கான ஹார்மோன்களை தூண்டுகிறது. இது உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட ஆண் மற்றும் பெண் உறுப்புகளுக்கு சக்தியை கொடுக்கிறது.
8 தர்பூசணி
இந்த நீர் நிறைந்த பழம் இரத்த குழாய்களை சீரமைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கரிக்கிறது. இதனால் உடலுறவு ஈடுபாடு அதிகரிக்கிறது.
9 அண்டிசோக்கஸ்
இது அடுக்கு அடுக்காக இருக்கும் ஒரு பூ வகையாகும். இதன் அடுக்குகளை சாப்பிடுவது பாலுணர்வை தூண்ட உதவுகிறது.
10 பைன் நட்ஸ்
இதில் அதிகளவில் ஜிங்க் உள்ளது இது ஒரு ஆரோக்கியமான உடலுறவுக்கு உதவியாக உள்ளது.
11 ஆலிவ் எண்ணெய்
இதில் உள்ள மோனோஅன்சட்டுரேடட் மற்றும் பாலிஅன்சட்டுரேடட் கொழுப்புகள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது.
12 டீ
இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தாம்பத்திய உணர்வை தூண்டுகிறது.
DINASUVADU