தாம்பத்தியதில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைவடைய இது தான் காரணம்..!

Default Image

திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இடையே ஒவ்வொரு விசயங்களில் எதிர்பார்ப்பு அதிகமாகும். இது நடக்காதபோது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இடைவெளி ஏற்படுகிறது.திருமணத்திற்கு பின் சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் உங்களது பார்டனருக்கு கோபம் வருகிறதா. தப்பு உங்கள் மேல் இல்லை. கோபித்து கொள்வதில் எந்த பிரோஜனமும் இல்லை.
இதற்கு எதிர்பார்ப்பு ஒரு முக்கிய காரணம். ஏன் எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தால் மட்டும் போதாது. வீட்டு வேலைகளை சரிவர பங்கிட்டு கொள்ள வேண்டும். வீட்டு சுமையையும் சமமாக பங்கிட்டு கொண்டால் பிரச்னை தீரும்.பொதுவாக மொபைலில் வரும் ரீல் நோட்டிபிக்கேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிலர் மனைவியின் ரியல் ஆக்சனுக்கு செவி சாய்ப்பதில்லை. அதனை காது கொடுத்து கேட்டால் போதும் பிரச்னை எவ்விதத்திலும் முளைக்காது.

வார இறுதியில் உங்களுக்கு விடுமுறை அளிப்பது போல, உங்கள் மொபைல் போன்களுக்கும் நீங்கள் விடுமுறை அளித்தால் எந்த வித பிரச்னையும் பெரிதாக வெடிக்காது. சிறிய சண்டையாக இருந்தாலும் புஷ்வாணமாக போய்விடும்.அதுபோல் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை இருவரும் குறைத்து கொள்ள வேண்டும். கணவன் மனைவியாக இருந்தாலும் ஒவ்வொருடைய தேவை என்பது வேறு. எது அத்தியாவசியம், எது வீண் செலவு என்பதை கணவன் மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம்.
உங்கள் இருவருக்கும் இடையில் பூதாகரமாக வெடிக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்காதீர்கள். சந்தோஷமான வாழ்க்கை கிடைத்திருக்கும் பட்சத்தில் வாழ்க்கையை நல்ல படியாக வாழ கற்று கொள்ளுங்கள்.அன்பு தான் ஆகச் சிறந்த ஆயுதம் என்பதை மறந்துவிடாதீர்கள்!
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்