இந்த தீபாவளி அன்று தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. A.R.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
அதே தீபாவளி தினத்தில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை, ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கியுள்ளார். மாஸ் மசாலா ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
தற்போது வரை தமிழ் திரையுலகில் இரு முன்னணி ஹீரோக்கள் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது. இன்னும் தனுஷின் பட்டாஸ், கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …