தளபதியின் தோல்வி படத்தை பார்த்து விஜய் ரசிகர் ஆன பிரபல தொகுப்பாளினி !
விஜய் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வந்த மெர்சல் கூட தமிழ் சினிமாவே அதிர்ந்து போகும் அளவிற்கு ஹிட்டானது.
இந்நிலையில் விஜய்யின் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி, திருமலை, துப்பாக்கி, கத்தி, மெர்சல் வரை பல படங்களை பார்த்து பல ரசிகர்கள் உருவாகி இருப்பார்கள்.
ஆனால், விஜய்யின் ஒரு தோல்வி படத்தை பார்த்து அவருக்கு ரசிகர் ஆனாராம் RJ மகா. ஆம், விஜய் எத்தனை படம் நடித்திருந்தாலும், வேட்டைக்காரன் பார்த்த போது தான் அவரின் தீவிர ரசிகர் ஆனேன் என்று கூறியுள்ளார்.