தமிழ் புத்தாண்டில் விரதம் எப்படி இருக்க வேண்டும் ?
செவ்வாய் விக்ருதி ஆண்டின் நாயகனாக(ராஜா) நவக்கிரகங்களில் பலம் பெற்று விளங்குகிறார். செவ்வாயின் ஆதிக்கம் மிக்க இந்த ஆண்டில் நன்மை பெற, லட்சுமி நரசிம்ம விரதத்தை மேற்கொள்வது நல்லது. எளிமையான இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். இரணியனை வதம் செய்த மகாவிஷ்ணுவின் கண்கள் தீப்பொறிகளை போல சிவந்தன. திருமகள் கூட அருகில் செல்வதற்கு அஞ்சி நின்றாள். ஆனால், பிரகலாதனைக் கண்டதும் அவரது உள்ளத்தில் கருணை பெருகியது. கோபம் அடியோடு மறைந்து, அந்த சிங்க முகத்திலும் புன்னகை அரும்பியது. குட்டிக்குழந்தையான பிரகலாதனை கட்டி அணைத்து மகிழ்ந்து தன் அன்பை வெளிப்படுத்தினார். நரசிம்மரை வழிபடுவதற்கு முற்பிறவிகளில் தவம் செய்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்த பாக்கியம் நமக்கு கிடைக்காது. செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் லட்சுமி நரசிம்ம விரதம் இருப்பது மிகச்சிறந்த நன்மைகளைத் தரவல்லது. நீண்டகாலத் துன்பங்களைக் கூடப் போக்கும் சக்தி இந்த விரதத்திற்கு உண்டு. 48 நாட்கள் தொடர்ந்து இவ்விரதம் இருக்கவேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.