தமிழ்ப் புத்தாண்டில் எந்த கடவுளை வணங்க வேண்டும் ?
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறிகளே ஆறுமுகம் கொண்ட பிள்ளையாக மாறியது. அந்த தீப்பொறிகள் சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து கிளம்பியதைக் கண்டதும் பார்வதிதேவி அஞ்சி ஓடினாள். அப்போது தேவியின் பாதத்தில் அணிந்திருந்த சிலம்பிலிருந்து நவமணிகள் சிதறி நாலாபுறமும் ஓடின. நவமணிகளில் இருந்து நவசக்திகள் தோன்றினர். அந்த நவசக்திகளிடமிருந்து நவவீரர்கள் அவதரித்தனர்.
வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேஸ்வரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த் தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்னும் வீரர்களே அவர்கள். இவர்களே சூரசம்ஹாரத்தின் போது முருகப் பெருமானுக்கு துணை நின்றனர்.
ராமநாமம் ஒலிக்கும் இடத்தில் அனுமன் இருப்பதைப் போல, முருகநாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் வீரபாகு இடம்பெற்றிருப்பார். அருணகிரிநாதர் பாடிய வீரவாள் வகுப்பு என்னும் பாடலில் முருக பக்தர்களை வீரபாகு உடன் நின்று காப்பதைப் போற்றிப்பாடியுள்ளார். பத்மாசுரனின் மகன் வஜ்ரவாகுவை வீரபாகு தான் வதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் புத்தாண்டில் தமிழ்க்கடவுளான முருகனுடன் அவரது வீரத்தளபதி வீரபாகுவையும் வணங்குவோம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.