கவிஞர் வைரமுத்து, கலைஞர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பிரபலங்கள் மரியாதை செலுத்தினர்.
மேலும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஜூன் 3 கலைஞர் பிறந்தநாள், தமிழுக்கு ஏடு திறந்தநாள், தமிழர்க்குச் சூடு பிறந்தநாள், பகுத்தறிவுக்குப் பிள்ளை பிறந்தநாள், பழைமை லோகம் தள்ளிக் களைந்தநாள், மேடை மொழிக்கு மீசை முளைத்தநாள், வெள்ளித் திரையில் வீரம் விளைத்தநாள், வள்ளுவ அய்யனை வையம் அறிந்தநாள், வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்.’ என பதிவிட்டுள்ளார்.
கலிபோர்னியா : பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸூம், வில்மோரும் விரைவில் வீடு திரும்ப போகின்றனர். அமெரிக்க…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…