தமிழுக்கு ஏடு திறந்தநாள்..!தமிழர்க்குச் சூடு பிறந்தநாள்….! வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்..! – கவிஞர் வைரமுத்து
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கவிஞர் வைரமுத்து, கலைஞர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பிரபலங்கள் மரியாதை செலுத்தினர்.
மேலும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ஜூன் 3 கலைஞர் பிறந்தநாள், தமிழுக்கு ஏடு திறந்தநாள், தமிழர்க்குச் சூடு பிறந்தநாள், பகுத்தறிவுக்குப் பிள்ளை பிறந்தநாள், பழைமை லோகம் தள்ளிக் களைந்தநாள், மேடை மொழிக்கு மீசை முளைத்தநாள், வெள்ளித் திரையில் வீரம் விளைத்தநாள், வள்ளுவ அய்யனை வையம் அறிந்தநாள், வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்.’ என பதிவிட்டுள்ளார்.
ஜூன் 3
கலைஞர் பிறந்தநாள்தமிழுக்கு
ஏடு திறந்தநாள்
தமிழர்க்குச்
சூடு பிறந்தநாள்பகுத்தறிவுக்குப்
பிள்ளை பிறந்தநாள்
பழைமை லோகம்
தள்ளிக் களைந்தநாள்மேடை மொழிக்கு
மீசை முளைத்தநாள்
வெள்ளித் திரையில்
வீரம் விளைத்தநாள்வள்ளுவ அய்யனை
வையம் அறிந்தநாள்
வைரமுத்துவின்
ஆசான் பிறந்தநாள் pic.twitter.com/SHbprLQ42E— வைரமுத்து (@Vairamuthu) June 3, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)