தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் – அமைச்சர் கே.சி வீரமணி…!!
கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என, வணிகத்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். புயல் பாதிப்புக்க மத்திய அரசிடம் 15 ஆயிரம் கோடியை நிவாரணமாக தமிழக அரசு கோரிய நிலையில், 350 கோடி விடுவித்து இருப்பது போதுமானதாக இல்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்தார். முன்னதாக, உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி வீரமணி வழங்கினார்.
dinasuvadu.com