தமிழக அரசு ஆட்சி கலைப்பு : பத்திரிக்கையில் வெளியான பரபரப்பு

Default Image

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு வருகிற 25 அல்லது 26 அன்று டிஸ்மிஸ் செய்யவிருப்பதாக ‘நமது எம்ஜிஆர்’-இல் செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நாளிதழ் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் என்பது கூடுதல் அதிர்ச்சி.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலா குடும்பத்தை கட்ச்சியிளிருந்து ஓரம்கட்ட துவங்கினர். இதனால் TTV.தினகரன் தரப்புக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்புக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது. சின்னம் யாருக்கு சொந்தம் என்பது பற்றியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஜெயா டிவியும், நமது எம்ஜிஆர் நாளிதழும் சசிகலா தரப்பு பக்கம் இருப்பதால் அவர்கள் இபிஎஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக செய்திகளை அவ்வபோது செய்திகளை பதிவிட்டு வருகிறது, 

அதன்படி, நமது எம்ஜிஆர் நாளிதழில் ‘தமிழக அரசு கலைப்பா’ எனும் தலைப்பில் ‘எடப்பாடி அரசு வருகிற 25 அல்லது 26 ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஆளுநர் ஆட்சி வரவிருப்பதாக தெரிகிறது. இபிஎஸ், ஒபிஎஸ் உள்ளிட்ட 23 அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குபதிவு செய்து கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்களின் பினாமி சொத்து கணக்குகள் மொத்தமும் ஆளுநர் வசம் உள்ளது. இதேபோல் கடந்த 1976-ம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி திமுக ஆட்சியை இரவோடு இரவாக கலைப்பதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடவடிக்கை எடுத்தார். அப்போது ஆளுநரின் ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிமணியம், பி.கே.தவே போன்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நீயமிக்கப்பட்டார்கள். அதேபோல் தற்போதும் ஆலோசகர்களாக ராஜகோபால் மற்றும் சோமநாதன் போன்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையறிந்த ஆளும் தரப்பினர் ஆதாரங்களை மறைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நெருக்கடியை எப்படி கையாள்வது என தெரியாமல் குழம்பி போயிருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்