தனது மகளை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 240,000 பவுண்டு மற்றும் எஸ்டேட் என அறிவித்த தந்தை !!!
- திரு ரோட்தொங் மகளை திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
- இளங்கலை, அல்லது மாஸ்டர் அல்லது தத்துவவாதி பட்டம் படித்தவரை தான் விரும்பவில்லை என்றார்.
தாய்லாந்தில் பண்ணை உரிமையாளர் ஒருவர் தனது 26 வயதான மகளை மணந்து கொள்பவருக்கு 240,000 பவுண்டுகள் அதே போல் அவரது வீடு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
தென் தாய்லாந்திலுள்ள சும்ஃபோன் மாகாணத்தில் வளமான துருவ பழம் பண்ணைக்கு சொந்தமானவர். அர்னோன் ரோடொங் (58).அர்னோன் ரோடொங் மகள் கர்சீதா(26) இவர் குடும்ப நலத்திட்டத்தை இயங்க உதவுகிறார்.
மேலும் சரளமாக ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் பேசுகிறார்.தன் மகள் ஒரு கன்னி எனவும் கூறியுள்ளார்.
தாய்லாந்தில் சில பகுதிகளில் திருமணம் செய்து கொள்ள மணமகன் தன் மணமகளுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும்.
ஆனால் திரு ரோட்தொங் மகளை திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
திரு.ரோட்டாங் கூறுகையில் கடினமாக உழைத்து தன் மகள் கர்சீதாவை மகிழ்ச்சியாக வைத்து இருந்தால் போதும் என்றார்.மேலும் இளங்கலை, அல்லது மாஸ்டர் அல்லது தத்துவவாதி பட்டம் படித்தவரை தான் விரும்பவில்லை என்றார்.
யாராக இருந்தாலும் தனது வியாபாரத்தை கவனித்துக்கொள்ளவும் , வியாபாரத்தை உயர்த்தவும் அதை தான் நான் விரும்புகிறேன் என்றார்.
ரோடொங்கின் துருவ பண்ணையில் ஒவ்வொரு நாளும் 50 டன் பழங்களை உற்பத்தி செய்கிறார்.