தடகள வீரர் லட்சுமணனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரத்தோர் :
நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் லட்சுமணன் கோவிந்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் வழங்கினார்.
ஜகார்த்தா ஆசிய போட்டியில் தடகள வீரர் லட்சுமணன் 10000மீ ஓட்டத்தில் இறுதி சுற்றில் மூன்றாவது பீடத்துடன் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் ஓடுதளத்தில் இருந்து விலகி கோட்டை தாண்டியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய அணியின் ஆட்சபனையை ஆசிய போட்டிக் குழு நிராகரித்து விட்டது. அவரது திறமையை பாராட்டும் வகையில் மத்திய விளையாட்டு அமைச்சர் ராதோர் ரூ.10 லட்சம் நிதியை வழங்கினார். தொடர்ந்து அவர் தடகளத்தில் சிறப்பாக செயல்பட ஊக்கம் தரும் வகையில் நிதி வழங்கப்படுகிறது என ராதோர் தெரிவித்தார்.