டைம் டிராவலில் பயணித்த விமானம்!2018-ல் புறப்பட்டு 2017-ல் சென்றடைந்த அதிசயம் ….

Default Image

அனைத்து வருடமும் முதலில் புத்தாண்டு வருவது  நியூசிலாந்து  நாடு .அதன் பிறகு  ஆஸ்திரேலியாவில் தான் புத்தாண்டு வரும் .எனவே உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதலில் 2018ஆம் ஆண்டு பிறந்தது. இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இருந்து ஹவாயியன் ஏர்லைன்-446 என்னும் விமானம் புறப்பட்டது.
இந்த விமானம் அமெரிக்காவின் ஹவாய் தீவைச் சென்றடைந்தபோது, அன்றைய தினம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மற்றும் நேரம் இரவு 10.15 ஆகும். இதற்கு காரணம் கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாடே ஆகும்.
மேலும், நியூசிலாந்து மற்றும் ஹவாய் தீவுக்கு இடையே சுமார் 23 மணி நேரம் கால இடைவெளி இருந்ததால் இச்சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக ஹவாயியன் விமானம் டிசம்பர் 31ஆம் திகதி, இரவு 11.55 மணிக்கு ஆக்லாந்தில் இருந்து புறப்பட இருந்தது.
ஆனால் 10 நிமிடம் காலதாமதம் ஆனதால், புத்தாண்டு பிறந்து 5வது நிமிடத்திலேயே, அதாவது 2018ஆம் ஆண்டு இரவு 12.05 மணிக்கு புறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், ‘இது காலங்களுக்கு இடையேயான பயணம்’ என தெரிவித்துள்ளார்.உலகிலேயே கடைசி புத்தாண்டை கொண்டாடுவது அமெரிக்கா என்பது குறிபிடத்தக்கது .
SOURCE: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்