டெல்லி மாசு காரணமாக இலங்கை அணி வீரர் வாந்தி
டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை அணி வீரர் இன்று விளையாட்டின்போது மைதானத்திலேயே வாந்தி எடுத்துவிட்டு பின் பெவிலியன் திரும்பியுள்ளார்.
இன்று இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை ஆடிகொண்டிருந்த போது இலங்கை அணி வீரர் சுரங்க லக்மல் மைதானத்திலேயே வாந்தி எடுத்தார். உடனே இலங்கை உடற்தகுதி நிபுணர் களத்துக்குள் விரைந்து லக்மலை அழைத்துச் சென்றார். இதுபோல் கடந்த ஞாயிறு அன்று சுற்றுச்சூழல் மாசு காரணமாக வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு கமகேவும் பெவிலியன் திரும்பினார்.
அதலால், இனி டெல்லியில் சுற்றுச்சூழல் முன்னேற்றம் அடைந்தால்தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இன்றும் கூட மூக்கு, வாய் ஆகியவற்றை துணியால் மூடியபடிதான் இலங்கை வீரர்கள் பலர் களத்தில் இருந்தனர்.