டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்:அரையிறுதியில் சாய்னா……..ஸ்ரீகாந்த்…..!!!
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சாய்னா முதல் செட்டை 17-21 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார்.
இருந்தாலும் மனம் தளராத சாய்னா 21-16 மற்றும் 21-12 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் சாய்னா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 22-20 என்ற செட் கணக்கில் முதல் செட்டை கிடாம்பி கைப்பற்றி நிலையில் அவருக்கு நெருக்கடி கொடுத்து சிறப்பாக ஆடிய சமீர் வர்மா, இரண்டாவது செட்டை 21-19 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.
இந்நிலையில் மூன்றாவது செட்டில் 23-21 என்ற புள்ளிகளில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றியை தன் வசமாக்கினார். இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அவர், அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார்.
DINASUVADU