டிரம்ப் மனம் மாறி வடகொரிய அதிபருடன் சந்திப்பு..!
டிரம்ப் தனது முடிவை மாற்றியதற்கு கிம் அனுப்பி வைத்த பெரிய கடிதமே காரணம் என்பது தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில், ஜூன் 12-ஆம் தேதி டிரம்ப்பும், கிம்மும் சந்திப்பதாக இருந்தது.
இந்நிலையில் கிம்மின் ஆக்ரோஷப் போக்கு காரணமாக, அவருடனான சந்திப்பை ரத்து செய்வதாக மே 24- ஆம் தேதி, டிரம்ப் கடிதம் எழுதினார். இதில் சுதாரித்துக் கொண்ட கிம், டிரம்ப்பை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறியதுடன், வடகொரிய ராணுவ உயர் அதிகாரி கிம் யோங் சோலை, டிரம்ப்பை சந்திக்க அனுப்பி வைத்தார்.
அப்போது அவரிடம் பெரிய கடிதத்தை கிம் கொடுத்தனுப்பியது தெரியவந்துள்ளது. அதை படித்த பிறகு மனம் மாறிய டிரம்ப், முன்பு அறிவித்தபடி ஜூன் 12-ஆம் தேதி கிம் உடன் சந்திப்பு நிகழும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள டிரம்ப், எனினும் உடனடியாக எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.