டிடிவி தினகரன்_ அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பா TTV பரபரப்பு பேட்டி

Default Image
ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை தனியாக சந்தித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்றிவிட்டு தன்னை முதல்வராக்க ஆதரவு கொடுத்ததாகவும் டிடிவி தினகரன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிடிவி தினகரனை சந்தித்ததை ஓ.பன்னீர்செல்வமும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், ‘முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் என்னிடம் தினகரன் பேசினார். அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கு பின்னர்தான், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன’ என ஓபிஎஸ் விளக்கம் அளித்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளார் தினகரன். இன்று திருச்சியில் பேட்டி அளித்த அவர், ‘ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நடைபயிற்சியின்போது என்னை சந்தித்து பேசினார்’ என்றார். ஓபிஎஸ் உடனான சந்திப்பு போன்று இந்த விவகாரமும் விவாதத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்