டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை….அமைச்சர் ஜெயக்குமார் சீண்டல்…!!
டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி உள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வது அதிமுக அல்ல; தேர்தல் ஆணையம் தான் . டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அதிமுகவில் தினகரனுக்கு இடமில்லை, தினகரனை நம்பியவர்கள் பரிதாபமாக உள்ளனர்.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. என கூறினார்.
dinasuvadu.com