டிசம்பர் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் : ஜெ தீபா
ஆர்கே நகர் இடைதேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இன்று அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேட்சையாக களமிறங்கும் T.T.V.தினகரன் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலில் களமிறங்கிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, தானும் தேர்தலில் நிற்க போவதாக அறிவித்துள்ளார். அவர் டிசம்பர் 4ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் மகள் என கூறும் அம்ருதாவை நான் இதுவரை பார்த்தது இல்லை எனவும், ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் திட்டம் போடுவதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்தார்.