டிக்கிலோனா படம் குறித்து ஆர்யா என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

டிக்கிலோனா படம் குறித்து நடிகர் ஆர்யா படத்தின் ப்ரீமியர் ஷோ-வில் பேசியுள்ளார்.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா திரைப்படம் வரும் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஜீ5-ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா இருவரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்.
வரும் 10-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. அந்த ப்ரீமியர் ஷோவை காண நடிகர் சிலம்பரசன், யுவன் சங்கர் ராஜா, ஆர்யா, யோகி பாபு, விஷ்ணு விஷால், ஷிரின் காஞ்ச்வாலா, வைபவ், ஆனந்த் ராஜ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில், படத்தை பார்த்த ஆர்யா கூறியதாவது ” படம் மிகவும் அருமையாக இருக்கிறது. ஜாலியாக கொண்டு போயிருக்காரு நம்ம இயக்குனர் கார்த்திக் யோகி. சந்தானம் எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டார். படத்தில் அவருடைய ஸ்டைல், ரொமாண்டிக், காமெடி, எல்லாமே அருமையாக செய்துள்ளார். படத்தின் வசனம் மிகவும் அருமையாக உள்ளது. சந்தானத்தின் சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025