டிஆர்பி குறைந்ததால் முன்னணி பிரபலத்தை வீட்டுக்கு கொண்டுவரும் பிக்பாஸ்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் ஆரம்பத்தில் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது பிக்பாஸ் குழுவுக்கு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் எதிர்பார்த்த அளவு டிஆர்பி கிடைக்காததுதான்.
தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனில் முதல் வாரத்தில் 9.24 ரேட்டிங் பெற்றிருந்தது. ஆனால் தற்போது நாணி தொகுத்து வழங்கும் இரண்டாவது சீசன் முதல் வாரத்தில் 7.93 மட்டுமே கிடைத்துள்ளது.
டாப் 5 நிகழ்ச்சிகள் லிஸ்டில் கூட பிக்பாஸ் இடம்பிடிக்க முடியவில்லை. அதனால் தற்போது பிக்பாஸ் வீட்டுக்கும் முதல் சீசனில் தொகுப்பாளராக இருந்த ஜூனியர் NTR மீண்டும் நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து வர பிக்பாஸ் குழு முடிவு செய்து, அவரை அணுகியுள்ளார்களாம்.