டாக்ஸியில் உல்லாசம்: லெஸ்பியன் ஜோடியை ரோட்டில் இறக்கிவிட்ட டிரைவர்..!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘உபர்’ கால் டாக்ஸியில் டிரைவராக பணிபுரிபவர் அகமத்- இல்- பவுதாரி. இவரது டாக்ஸியில் நேற்று 2 பெண்கள் பயணம் செய்தனர்.
ஓடும் காரில் 2 பெண்களும் அடிக்கடி முத்தம் கொடுத்து வந்தனர். அதன் பிறகு இருவரும் காரிலேயே அத்து மீறலில் ஈடுபட்டனர்.
இதனை டிரைவர் கவனித்து எச்சரித்தார். தொடர்ந்து இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டனர். அந்த பெண்கள் லெஸ்பியன் என தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் இருவரையும் காரில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.
ஒரு பெண்ணின் பெயர் அலெக்ஸ் லோவின் (26) மற்றொரு பெண் எம்மா பிச்ல் (24) இருவரும் 2 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். தற்போது மின்கட்டன் நகரில் தங்களது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இவ்வாறு நடந்து கொண்டனர்.
ஆனால் இருபெண்களும் உபர் டாக்ஸி நிறுவனத்திடம் டிரைவர் மீது புகார் செய்தனர். கால் டாக்ஸி விதியை மீறி தங்களை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியேற்றியதாக கூறினார்கள். இதையடுத்து டிரைவரின் லைசென்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.