ஜெயலலிதா_வின் தொடக்க கால வாழ்க்கை …!!
தமிழ் , தெலுங்கு, கன்னட மொழிகளில் சுமார் 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்தவர் ஜெ.ஜெயலலிதா.இவர் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 1948 கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார்.ஜெயலலிதாவின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவின் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.
dinasuvadu.com