ஜப்பானில் புறப்பட தயாரான விமானத்துக்குள் புகை பரவியதைக் கண்டு பயணிகள் அச்சம்..!
ஜப்பானில் புறப்பட தயாரான விமானத்துக்குள் புகை பரவியதைக் கண்டு பயணிகள் அச்சம் அடைந்தனர். அந்நாட்டு நேரப்படி இன்று காலை ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 767 என்ற விமானம் டோக்யோவில் இருந்து 137 பேருடன் புறப்படத் தயாரானது. ஆனால் எஞ்சினை ஆன் செய்ததும் புகை கேபினில் பரவியது.
புகையை சுவாசித்த 6 பேர் மயக்கமடைந்ததை அடுத்து பயணிகள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.