ஜப்பானில் தொடர் கனமழை..!உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு!
வரலாறு காணத அளவிற்கு ஜப்பானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
ஜப்பான் நாட்டில் கனமழை பெய்து வருகின்றது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானில் உள்ள ஒக்கயாமா,எகிமா குரோஷிமா,கியோட்டா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.மேலும் மழை வெள்ளத்தாலும்,மண்சரிவினாலும் 176 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.மேலும் பலர் காணமல் போயுள்ளனர்.இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.சுமார் 75000 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.