சார்லட் நகரில் வசித்து வருபவர் லானா சூ கிளேட்டன் என்பவர் இவர் முன்னாள் செவிலியராக பணியாற்றி உள்ளார்.இவர் கோடீஸ்வரரான அவரது கணவர் ஸ்டீவன் கிளேட்டனை கொலை செய்ததாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கொலை எவ்வாறு நிகழ்ந்தது என்று பிரேத பரிசோதனையின் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.அதில் கொலை செய்யப்பட்ட அந்த நபர் கண்ணிற்கு பயன்படுத்திய சொட்டுமருந்து தான் இறப்பு காரணம் என்று தெரியவந்துள்ளது.இந்நிலையில் கணவரை கொன்றதாக கைது செய்யப்பட்ட அப்பெண் அளித்த வாக்குமூலம் பரப்ரப்பு ஏற்படுத்தி உள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில் தன் கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் இதனால் அவரைப் பழிவாங்க திரைப்படத்தை பார்த்து கண்ணில் விடும் சொட்டு மருந்தை குடிநீரில் கலந்தேன் என்று தெரிவிந்தார்.மேலும் அப்பெண் கூறுகையில் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் என்றே நினைத்தே ஆனால் உயிரிழப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று லானா ஒப்புக் கொண்டார். எனினும் கொலை குற்றத்திற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வளர்ந்து வரும் சமூகத்தில் திரைபடங்கள் நல்ல விஷயங்களை அதிகளவில் கற்றுகொடுக்க தவறுகிறதோ என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப் படுகின்றனர்
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…