சேரனின் உள்ளிருப்பு போராட்டத்துக்கு விஷால் பதிலடி

Default Image

ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனுதாக்கல் செய்தார். இந்நிலையில் இவர் தேர்தலில் போட்டியிடுவதால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்யவேண்டும் எனவும். தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என கூறி இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘நான் தேர்தலில் போட்டியிடுவது எனது விருப்பம். சேரன் சார் மீது நல்ல மதிப்பு வைத்துள்ளேன். ஆனால் அவர் இவ்வாறு தரக்குறைவாக செய்து வீண் விளம்பரம் தேடிகொள்கிறார். சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என எந்த சட்டவிதியும் இல்லை. ஆகவே திரு.சேரனின் வாதத்தை ஏற்றுகொள்ள முடியாது. தேர்தலில் போட்டியிட்டால் அரசாங்கம் சங்கத்துக்கு எதிராக செயல்படும் என்பது ஜனநாயத்துக்கு எதிரானது.

உரிமைகள் என்பது கெஞ்சி கேட்டுபெரவேண்டியவை அல்ல, அவை குரல் எழுப்பி பெரபெடவேண்டியவை. அர்கே நகரில் போட்டியிடுவது மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்ப்பதான். எனது சட்ட நண்பர்களை ஆலோசித்து களம் இறங்கியுள்ளேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பேன். மற்றபடி எந்த கீழ்த்தரமான விளம்பரம் தேடுதல்களுக்கும் பதில் சொல்ல மாட்டேன். சேரன் திருந்தி வீண் விளம்பரங்களை தேடுவதை நிறுத்திவிட்டு திருந்தி ஆரோக்கியமான சூழலில் வாழவேண்டும். சேரனின் நடவடிக்கை தொடர்ந்தால் சங்கவிதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.’ என அற்க்கியியில் தெரிவித்து இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்