செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் நட்புறவு விருது…! ரஷ்ய அரசு வழங்கியது…!!!
பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை கவுரவிக்கும் வகையில் ரஷியா சார்பில் ‘ நட்புறவு விருது ‘ வழங்குவதற்கான விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் செர்கெய் கோடோவ் சிறப்புமிக்க ‘ நட்புறவு விருது ‘ வழங்கி கௌரவித்தார்.
‘ நட்புறவு விருது ‘ என்பது இரு நாடுகள் இடையே அமைதி, நட்பு, இணைந்து செயலாற்றுதல், புரிதல் ஆகியவற்றுக்காக பாடுபட்ட பிரபலங்களுக்கு ரஷியா நாடு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.