சென்னை அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கணவன் துக்கிட்டு தற்கொலை!

Default Image

மனைவியின் கழுத்தை அறுத்து சென்னை செங்குன்றம் அருகே கொலை செய்துவிட்டு கணவன் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.சென்றம்பாக்கம் என்ற பகுதியினைச் சேர்ந்த டேனியல், கேஸ் ஏஜென்ஸி ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். டேனியலுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த வாரம் மூத்த மகன் உடல்குறைவால் இறந்து விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக டேனியலின் மனைவி அம்மு மன உளைச்சலோடு இருந்துள்ளார்.

இந்நிலையில் தினமும் குடித்துவிட்டு வந்த டேனியல் மனைவி அம்முவுடன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் டேனியல் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். திரும்ப வீட்டுக்கு வந்தபோது, அம்மு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். அப்போது சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்த டேனியல், அம்முவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பின்னர் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைபற்றி, வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்