செக்ஸ் தொழில் செய்த பெண்கள் கைது..!!
செக்ஸ் தொழில் செய்த 14 பெண்களை காவல்துறை கைது செய்தது..!!
சிங்கப்பூர்:
சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனைகளில் 14 பெண்களும், ஓர் ஆடவரும் கைது செய்யப்பட்டனர்.விலைமாதர் என்ற சந்தேகத்தில் 20 வயதுக்கும் 52 வயதுக்கும் உட்பட்ட அந்தப் பெண்கள் (செப்டம்பர் 7,8) வெள்ளி, சனிக்கிழமைகளில் கைதுசெய்யப்பட்டனர்.
ஜாலான் புசார், யூ தோங் சென் ஸ்டிரீட், டெம்பல் ஸ்டிரீட், ஆல்பர்ட் ஸ்டிரீட், ஜாலான் சுல்தான். ஸ்மித் ஸ்டிரீட் ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டல்களிலும், வாடகை வீடுகளிலும் அவர்கள் பிடிபட்டனர்.
பிடிபட்ட பெண்கள், தங்கள் தொழில் பற்றி சமூக ஊடகங்கள் வழியே விளம்பரம் செய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின் கீழ் 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
உரிமம் பெறாமல் விலைமாதர் கூடத்தை நடத்துவோருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையுடன் 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். விலைமாதரைக் கொண்டு வருமானம் ஈட்டுவோருக்கும் அதே தண்டனை விதிக்கப்படலாம்.அத்தகைய முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
DINASUVADU