சுவையான பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி?

Default Image
  • பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி?

நமது சமையல்களில் காய்கறிகள் இலலாத சமையலே இருக்காது. பூசணிக்காயைக் கொண்டு பொரியல், வறுவல் என்று தான் செய்வோம். ஆனால் பூசணிக்காயை கொண்டு சப்பாத்தி செய்யலாம் என்பது தெரியுமா?

Image result for பூசணிக்காய் சப்பாத்தி

தற்போது பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • துருவிய சிவப்பு பூசணிக்காய் – 2 கப்
  • கோதுமை மாவு – 3 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சிவப்பு பூசணியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய் துருவல் சேர்த்து, நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான பூசணிக்காய் சப்பாத்தி தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்