சுவையான நண்டு ப்ரை செய்வது எப்படி ?
- சுவையான நண்டு ப்ரை செய்வது எப்படி ?
நம்மில் அநேகருக்கு நாடு என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடலோரப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு நண்டு பற்றி தெரிந்திருக்கும். மேலும், இந்த நண்டை வைத்து பல வகையான, விதவிதமான ருசியான உணவுகளை செய்யலாம். தற்போது சுவையான நண்டு ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- நண்டு – கால் கிலோ
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மிளகுத்தூள் – அரை ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
நண்டின் ஓட்டை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தம் செய்த நண்டில் மிளகாய் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து, 1 ஊற வைக்க வேண்டும்.
பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி சூடேறியதும், ஊறவைத்த நண்டு கலவையை போட்டு, இரண்டு பக்கமும் வேகும் படி பொறித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான நண்டு ப்ரை ரெடி.