சுவையான இறால் ஃ ப்ரை செய்வது எப்படி ?

Default Image
  • சுவையான இறால் ஃ ப்ரை செய்வது எப்படி ?

இறால் அனைவரும் விரும்பி சாப்பிடகே கூடிய கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று. இதனை பல வகைகளில் உணவாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதில் சுவையான இறால் ஃ ப்ரை செய்வது எப்படி என்று பாப்போம்.

தேவையானவை

  • இறால் – கால் கிலோ
  • உருளைக்கிழங்கு – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • மிளகு, சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
  • கடுகு – அரை ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

இறாலை சுத்தம் செய்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு, சீரகத் தூள், உப்பு நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

Image result for இறால் ஃ ப்ரை

உருளைக்கிழங்கு வெந்து, நீர் வற்றி மசாலா பிரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் வேக வைத்த கலவையை கொட்டி 5 நிமிடம் கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான இறால் ஃப்ரை தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்