சுவிட்சர்லாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு இல்லை!

Default Image

விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக ‘தமிழீழம்’ என்ற தனி நாடு கேட்டு  போராடி வந்தது. அதன் தலைவராக பிரபாகரன் இருந்தார்.

ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 27 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடைபெற்றது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

Image result for Switzerlandcourt PARABAKARAN CASE

தற்போது இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பெலின்சோனா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசு சார்பில் விடுதலைப்புலிகள் இயக்கம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த ஆவணங்களை கோர்ட்டு நிராகரித்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் விடுதலைப்புலிகள் குற்ற செயல்களில் ஈடுபடவில்லை. அது ‘தீவிரவாத அமைப்பு இல்லை’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டோரை வழக்குகளில் இருந்து விடுவித்தும் சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்