சீன அதிபர் மீண்டும் ரஷ்ய அதிபராகும் புடினுக்கு வாழ்த்து!
சீன அதிபர் ஜி ஜின்பிங், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ உள்ளிட்ட தலைவர்கள் ரஷ்யாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புடினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கஜகஸ்தான், பெலாரஸ், பொலிவியா மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் புடினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இதுவரை வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ராணுவ பலத்தை அதிகரிப்பதுடன், ரஷ்ய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் தாம் பாடுபடப் போவதாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புடின் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரஷ்ய அதிபர் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.