சீன அதிபர் சீ ஜின்பிங் பாலிவுட் படங்களின் தீவிர ரசிகராம்!
பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் சீ ஜின்பிங் பேச்சுவார்த்தையின்போது, பாலிவுட் படங்களைப் பற்றியும் ஆவலுடன் பேசியது தெரிய வந்துள்ளது. இந்திப் படங்களை சீன அதிபர் விரும்பி பார்ப்பதாக இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே வுஹான் நகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மோடி-ஜின்பிங் சந்திப்பில் இருநாட்டு திரைப்படங்களையும் பரஸ்பரம் திரையிடுவது குறித்து பேசப்பட்டுள்ளது.
அமீர்கான், ரஜினிகாந்த், ஷாருக்கான் போன்ற இந்திய நட்சத்திரங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அண்மையில் சீனாவில் வெளியான பாலிவுட் திரைப்படங்கள் வசூலை வாரிக்குவித்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.