சீன அணு ஆயுத சோதனைக் கூடத்தை தகர்த்தது வடகொரியா..!!
சீன எல்லையில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடத்தை வடகொரிய அரசு தகர்த்து விட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புங்க்கை- ரி ((Punggye-ri)) எனுமிடத்தில் உள்ள சோதனைச் சுரங்கங்களில் வடகொரியா 6 அணு ஆயுதங்களை சோதனை செய்துள்ளது.
65 ஆண்டுகால கொரிய போர் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே சிங்கப்பூரில் வைத்து வரும் ஜூன் 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நல்லெண்ண அடிப்படையில் அணு ஆயுத சோதனைகளை கைவிட ஒப்புக் கொண்டுள்ள வடகொரியா முதல் கட்டமாக அணு ஆயுத சோதனைக் கூடத்தை தகர்த்துள்ளது. வெடிபொருட்கள் மூலம் இந்த சோதனைக் கூடம் தகர்க்கப்பட்டதை பார்வையிட சர்வதேச பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்