டெஸ்லா நிறுவனர்…!! பாராட்டை பெற்ற சீன அதிபர் ஜின்பிங்…!!!
சீனாவில் பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் கார்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும் என அதிபர் ஜின்பிங் அறிவித்துள்ளார்.
சீனாவின் boao நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் ஜின்பிங், ஆட்டோமொபைல், கப்பல் கட்டுமானம், விமானம் ஆகிய துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான உச்சவரம்பு விரைவில் அதிகரிக்கப்படும் என்றார்.
சீனாவில் தற்போது ஆட்டோமொபைல் துறையில் 50 சதவீதமாக இருக்கும் அன்னிய முதலீட்டு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று டெஸ்லா நிறுவன தலைமை செயலதிகாரி எலான் மஸ்க் ஏற்கனவே வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள எலான்மஸ்க், வர்த்தகப் போரை தவிர்ப்பது அனைத்து நாடுகளுக்கும் நன்மை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்