சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது – அதிபர் ஜின்பிங் …!!
சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது என்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங் மறைமுகமாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற சீர்திருத்த கொள்கையின் 40வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அதிபர் ஜின்பிங், என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோர் சீன மக்களுக்கு யாரும் கட்டளையிட முடியாது என்று ஆவேசத்துடன் கூறினார். அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடவும் அவர் தவறவில்லை. இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ சீன மக்களுக்கு யாரும் கட்டளையிட முடியாது” என கூறினார்.