சீனாவில் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது உருண்டு விழுந்த மலைப்பாறைகள்…!
நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மீது மலைப் பாறைகள் உருண்டு விழும் வீடியோ காட்சிகள் சீனாவில் வெளியாகியுள்ளன. தென்மேற்கு சீனாவின் சாங்கிங் ((Chongqing)) என்ற இடத்தில் சரமாரியாக விழும் மலைப்பாறைகளுக்கிடையே இரு வாகனங்கள் சிக்கிக்கொள்ளும் காட்சிகள் பின்னால் சென்ற மற்றொரு வாகனத்தில் இருந்த காமிராவில் பதிவாகியுள்ளன.
தகவல் அறிந்து விரைந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் சிக்கிய வாகனங்களை மீட்பது, பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் உயிரிழப்பு, காயம் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.