சீனாவில் கடுமையான புயல்,வெள்ளம் !5 பேர் பலி! 2,00,000 பேர் பாதிப்பு!
72 ஆயிரம் பேர் சீனாவில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். குவாங்டாங் ((Guangdong)) மாகாணத்தில் வீசிய புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளத்தினால் நேரடியாக 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குவாங்டாங் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெங்ஜியாங் மாகாணத்தில் மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 3 லட்சத்து 67 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.