சிரியா விவகாரத்தில், அமெரிக்காவுக்கும் – ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டம் …!
அமெரிக்காவுக்கும் – ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் சிரியா விவகாரத்தில், உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
சிரியாவில் கடந்த சனிக்கிழமை அதிபர் ஆசாத்தின் படையினர் ரசாயன குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு சிரிய அதிபர் ஆசாத்தும், அவருக்கு ஆதரவான ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் உரிய விலையைக் கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கு , சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அவை சுட்டு வீழ்த்தப்படும் என ரஷ்யா பதிலடி கொடுத்திருந்தது.
இதற்கு, ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த ரஷ்யா தயாராகட்டும் என்றும், அவை வந்து கொண்டே இருப்பதாகவும் ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்க – ரஷ்ய உறவு பனிப்போர் காலத்தையும் விட மோசமாகி விட்டதாக மற்றொரு ட்விட்டர் பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.