சிரியா அதிபர் வடகொரியா பயணம் – கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசுகிறார்..!

Default Image

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச இருப்பதை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் அரசு முறை பயணமாக வடகொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பஷர் அல்-ஆசாத், ‘நான் வடகொரியா சென்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச இருக்கிறேன்’ என கடந்த 30-ந் தேதி கூறியதாக வடகொரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பஷர் அல்-ஆசாத், எந்த தேதியில் வடகொரியா செல்கிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

கிம், வடகொரியாவின் தலைவராக பதவியேற்றுக்கொண்டது முதல் இதுவரை எந்த ஒரு அதிபரும் வடகொரியாவுக்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது கிடையாது. அந்தவகையில், வடகொரியாவில் கிம் ஜாங் அன்னை சந்திக்கும் முதல் அதிபர் என்கிற பெயரை பஷர் அல்-ஆசாத் பெறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்