சிரியாவில் வான்வழி தாக்குதல் குழந்தைகள் உட்பட 43 பேர் பலி

Default Image
சிரியாவின் கிழக்கே அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை நடத்திய வான்வழி தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன.
சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுகளுக்கு இரையாகி உள்ளனர்.
இந்த நிலையில், ஈராக் எல்லை அருகே டெயிர் எஸ்ஸார் மாகாணத்தில் அபு ஹசன் கிராமத்தில் ஐ.எஸ். அமைப்பினரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என தகவல் கிடைத்து உள்ளது.இதனை தொடர்ந்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் இங்கு வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதில், ஐ.எஸ். உறுப்பினர்களுடன் 17 குழந்தைகள் உள்பட 36 பேர் பலியாகினர்.
இதேபோன்று பலியான மற்றொரு 7 பேர் பொதுமக்களா அல்லது ஐ.எஸ். அமைப்பினரா என அடையாளம் காணப்படவில்லை.கடந்த செப்டம்பரில் இருந்து ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக சிரிய ஜனநாயக படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் அதிக பலி எண்ணிக்கை கொண்ட தாக்குதலாக இது உள்ளது.  பொதுமக்கள் பலியை தடுப்பதில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என தொடர்ந்து கூட்டணி படையினர் கூறி வருகின்றனர்.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்