சிரியாவில் மீண்டும் போர் விமானங்கள் தாக்குதல்! 44 பேர் பலி!60 பேர் காயம்
44 பேர் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ள இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.
சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், நுஸ்ரா முன்னணி என்னும் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இட்லிப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஜர்தானா கிராமத்தின்மீது நேற்றிரவு போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 44 பேர் உயிரிழந்ததாகவும், இந்த தாக்குதலை ரஷியா நாட்டு போர் விமானங்கள் நடத்தியதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த சுமார் 60 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.