சித்த மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படும் வெல்லம்…

Default Image
இயற்கையாக கிடைக்கும் கரும்பை சாறு எடுத்து அதனை காய்ச்சி அதிலிருந்து தயரிக்கபடுவது வெல்லம்.வெல்லம் அதிகமான இரும்பு சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது.
Image result for வெல்லம்
சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில்  உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.Image result for வெல்லம்
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும்  அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.
ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது. வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.Image result for வெல்லம்
வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. அதனால்தான் உணவு  உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள் பலரும். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.Related image
பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாகச் செய்து தரலாம். வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும்  அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயனங்களைச் சேர்ப்பதால், இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு ஏற்படுவதில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்