சித்திரை முதல்நாளில் கல்யாணக் கோலம் தந்த ஈசன் …!
பங்குனி உத்திரத்தில் பார்வதி-சிவபெருமான் கல்யாண வைபவம் நிகழ்ந்தது. இந்த வைபவத்தைக் காண உலக உயிர்கள் அனைத்தும் ஓரிடத்தில் கூடினர். பூமி பாரம் தாங்காமல், வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது. திருக்கல்யாணத்தைக் காண வந்திருந்த அகத்தியரை அழைத்தார் ஈசன். அகத்தியரே! பூபாரத்தை நீர் தான் சரி செய்ய வேண்டும். உடனே தென்திசைக்கு செல்லும்! உமக்கு அங்கேயே தேவியோடு கல்யாண கோலத்தில் காட்சி தருவேன், என்று அருள்செய்தார். ஐயனின் வேண்டுகோளை ஏற்ற அகத்தியர் பொதிகை மலை வந்து சேர்ந்தார். பூமியைத் தன் தவசக்தியால் சமப்படுத்தினார். தான் கொடுத்த வாக்குப்படி, சித்திரை முதல்நாளில் திருக்கல்யாண கோலத்தில் சிவன் காட்சிதந்தார். இந்த நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் சித்திரை விசுவன்று நள்ளிரவில் சிறப்பாக நடக்கிறது.