சவூதியில் முதல் பெண் வங்கி மேனஜர் ..!!

Default Image

தற்போதுள்ள சவூதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கி ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய வங்கி உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வங்கியின் தலைவராக சவூதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய வங்கி, 17.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் அந்நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.

நீண்டகாலமாக பழமைவாதத்தை கடைப்பிடித்துவரும் சவூதி அரேபியா நாடு, கடந்த ஓராண்டாக பெண்களுக்கான பல உரிமைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக பெண்கள் வாகனம் இயக்குவதற்கு அனுமதி வழங்கியது.
தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்திற்கு தலைமை வகித்து வரும் ஒலயன், சவூதி அரேபியாவின் நிதித்துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். போர்ப்ஸ் இதழின், மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் இளவரசர் முகமத் பின் சல்மான் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்